திருத்துறைப்பூண்டிக்கு தென்கிழக்கே 35 கி. மீ. தொலைவில் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. வேதங்கள் பூசை தலமாதலால் 'மறைக்காடு' என்று பெயர் பெற்றது. இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவத்தைப் போக்கிக் கொள்ள இராமபிரான் இத்தலத்தில் உள்ள ஆதிசேது தீர்த்தத்தில் நீராடி, சிவபூசை செய்தார். வேதங்கள் பூசை செய்து மூடிச்சென்ற கதவுகளைத் திறக்கவும், பின்பு மூடவும் திருஞானசம்பந்தரும், அப்பரும் பாடிய தலம். மூலவருக்குப் பின்னால் சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகச் சக்தி வாய்ந்தவர். |